கோவில் தல வரலாறு


               "தென்னாடுடைய சிவனே போற்றி   என்னாட்டவர்க்கும்
  இறைவா போற்றி", என்ற முதுமொழிக்கு இணங்க தமிழகத்தின் தென் பகுதியில்,திருநெல்வேலியில் எல்லா கிராமங்களிலும் சிவபெருமான் நீக்கமற நிறைந்து எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
அப்படி ஒரு ஆலயம் திருநெல்வேலி  மாவட்டம் வீரவநல்லூர்  
 அருகே இரண்டு  கிலோமீட்டர் தொலைவில் அரிகேசவநல்லுரில் அமைந்துள்ளதுஇங்கு அருள்மிகு பெரியநாயகி என்கிற பிருகந்நாயகி உடனுறை ஹரிகேசநாதர்  பக்தர்க்கு அருள் புரிகின்றார்.

நின்றசீர்  நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் இந்த திருக்கோயிலை கட்டியதாக அறிகின்றோம்.அரிகேசவன் என்ற  பெயரும் அந்த மன்னருக்கு உண்டுகிட்டத்தட்ட  ஆயிரம்   ஆண்டுகளுக்கு  முன்பு கட்டப் பட்டிருக்கும்  இந்த ஆலயத்தின் வேறு பெயர்கள் வருமாறு, (அரிகேசவமுடையார், அரிகேச்வரமுடைய நாயன்மார் மேலும் முல்லிநாட்டு ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப் பட்டதாம்) மங்கலம் என்றாலே அங்கு வேதங்கள் ஓதப்பட்ட இடமாகும்
பல்வேறு கல்வெட்டுக்கள், பழம் பெருமைகளை கொண்ட இத்திருக்கோயில், கும்பாபிஷேக விழாவை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் காணவில்லை என்பதே பெருங் கவலையாம். இதை தீர்க்கும்  பொருட்டு  தற்போது புனருத்தாரண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்டமான ஆலயத்தை வலம் வருவோமா.?,

ஆரம்பத்தில் பெரியதோர் மண்டபம், பலிபீடம், கொடிமரம், நந்திதேவர்  உறைவிடம். தாண்டினோமானால் இன்னும் விலாசமாக தேரோடும்  வீதியையும் சேர்த்து  மூன்று  உட்பிரகாரங்கள் உள்ளன.
மொத்தம் இரண்டு கருவறைகள், ஒன்றில் துவார பாலகர்களுடன் அருள்மிகு அரியநாதர் காட்சி தருகின்றார்.
மற்றதில் அருள்மிகு குபேர நாதர்  லிங்கரூபமாய் விளங்குகின்றார். இதையே ஆதி அரியனாதராகவும்  வர்ணிப்பார்கள் .

உள்ளே சென்றால் அருள்மிகு விநாயகர், ஜுரதேவர், சப்தகன்னியர், வள்ளி தெய்வயானையுடன் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி, சனி பகவான், சண்டிகேஸ்வரர், மற்றும் காசி விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதச்வாமி  சன்னதிகள் அழகுற அமையபெற்றதை காண்கின்றோம்.
இத்தலத்து தென்முககடவுளை பார்க்கும் போது தக்ஷினாமுர்த்தி அருகே உள்ள பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்று என்பதை நினைவில் வைப்போம். மற்ற நான்கு குரு ஸ்தலங்கலாவவை : திருப்புடை மருதூர், அத்தாளநல்லூர், தென்திருப்புவனம், இடைகால் ஆகும். தக்ஷினாமுர்த்தி தனது இடது கரத்தால் சிஷ்யனை அருள்பாலித்துக்கொண்டும், வலது கை சின்முத்திரையுடனும் அழகாக  அருள் புரிகின்றார்.
வெளிப்புறம் பார்த்தால் குபேரன், ஜேஷ்டா தேவி, பைரவர் ,முக்குருணீ விநாயகர்,  காசி  விசாலாக்க்ஷி  சமேத விஸ்வநாதர், வள்ளி  தெய்வயானை சமேத முருகன், மற்றும் நவக்கிரகங்கள் எழிலுடன் இருகின்றார்கள்.  

ஜேஷ்டாதேவி இங்கே மாந்தி என்ற செவ்வாய் தோஷத்திற்கு அற்புதமான பரிஹார சன்னதி ஆகும், சமீபத்தில் நுற்றுக்கணக்கான குடும்பங்கள் இங்கு வந்து பரிஹார பூஜைகள் செய்து பலனடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அம்பாள், ஆலயத்தின் முன்றாம் பிரகாரத்தில் தனிக்கோயில் நாயகியாய் வீற்றிருக்கின்றாள்.
தீர்த்தக்குளமும் மிகவும் சீர் செய்யும் நிலையில் உள்ளதை காணலாம். மணிவாசகபெருமானின் விழா கொண்டாடும் மண்டபமும் அருகே அதே நிலையில் இருப்பதை காணலாம்.
இவ்வாலய கும்பாபிஷேகம் கடைசியாக ரேவதி நட்சத்திரத்தில் நடந்திருப்பதாலும் ரேவதி நட்சத்திரகாரர்கள் பெருமளவில் பங்கு கொண்டு பெறும் பயனடையலாம் என்று ஒரு கைதேர்ந்த ஜோதிடர் சொன்னார்.
ஆலய தல விருஷ்ஷமான நெல்லி மரம்  சுவாமி சன்னதி பின்புறம் உள்ளது.






கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கொடுத்த விவரம்  

திருவிழா  மற்றும்  விசேசதினங்கள்
        
              சித்திரை                            மாசபிறப்பு
           வைகாசி                           விசாகம்  ஷண்முகர்  அபிஷேகம்
           ஆனி                                  நடராஜர் அபிஷேகம் 
           ஆடி                                   செவ்வாய் , வெள்ளி  அம்மன்  அபிஷேகம்   
           ஆவணி                            சிவன் அபிஷேகம்
           புரட்டாசி                         நவராத்திரி  உற்சவம்  
           ஐப்பசி                              பவுர்ணமி  அன்னாபிஷேகம்
           கார்த்திகை                       தீபம்  வழிபாடு
           மார்கழி                            தனுர்மாச  பூஜை , ஆருத்திரா  தரிசனம்
           தை                                    வெள்ளி  அம்மன்  வழிபாடு  
           மாசி                                  மாசி  மகம் , சிவராத்திரி  சிறப்பு பூஜை   
           பங்குனி                            உத்திரம்  சிறப்பு  பூஜை
   
     இது  தவிர  மாத  சிவராத்திரி , பிரதோஷம்,  வார  வழிபாடு  நடைபெறுகிறது





No comments:

Post a Comment